Yarl கதிர்

இணைய பத்திரிகை

சஜித் பிரேமதாசாவின் வேலைத்திட்டம் தடைப்பட்டமைக்கு தான் காரணமல்ல- ரணில்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவின் வேலைத்திட்டம் தடைப்பட்டமைக்கு தான்தான் காரணம் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க  மறுத்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, “எனது யோசனையின் பிரகாரமே ஜனாதிபதித் தேர்தலில் எமது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச நிறுத்தப்பட்டார்.

மேலும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவின் வேலைத்திட்டம் தடைபட்டமைக்கு நான் தான் காரணம் என  கூறுவதில் எந்ததொரு உண்மையும் இல்லை.

அதாவது அவரை வெற்றியடைய செய்வதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவினை திரட்டிக்கொண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரத்தினை நாம்தான்  முன்னெடுத்தோம்.

அத்துடன் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்களென ஒவ்வொருவருக்கும் முக்கிய பொறுப்புக்களை ஒதுக்கி கொடுத்தோம்.

அதனடிப்படையில் எனக்கு, வடக்கு- கிழக்கில் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதற்கமைய அப்பகுதியில் அதிக சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தோம்.

ஆனால் தெற்கு பகுதியில் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போனமேயே தோல்விக்கு காரணம்.

அதாவது சிங்கள, பௌத்த மக்களின் வாக்குகளையே அதிகமாக எம்மால் பெற முடியாமல் போனது இந்த தேர்தலிலேயே ஆகும்.

எனவே நாம் விட்ட பிழைகளை தொடர்ச்சியாக  பேசுவதனை விடுத்து கட்சியை முன்னோக்கி கொண்டுச் செல்வது தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே தற்போதைய சூழ்நிலையில் சிறந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!