Yarl கதிர்

இணைய பத்திரிகை

செல்லாத நோட்டுகளை சேமித்து வைத்த மூதாட்டிகளுக்கு பெருகும் ஆதரவு: ஆட்சியர் பிறப்பித்த ஆணை

தமிழகத்தில் பணமதிப்பிழப்பு பற்றி தெரியாமல் பழைய 500 ரூபாய் நோட்டுகளாக பணத்தை சேமித்து வைத்திருந்த மூதாட்டிகளுக்கு சென்னையைச் சேர்ந்த அறக்கட்டளை உதவி செய்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பூமலூர் பகுதியை சேர்ந்த மூதாட்டிகள் தங்கம்மாள் மற்றும் ரங்கம்மாள் காளி.

இவர்கள் கடந்த மாதம் மருத்துவ செலவுக்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை எடுத்து தனது சகோதரரிடம் வழங்கியுள்ளனர். அதனை கண்ட சகோதரர் அதிர்ச்சி அடைந்தார்.

பணமதிப்பிழப்பு பற்றி தெரியாமலேயே பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்றாமல் சுமார் 46 ஆயிரம் வரை இவர்கள் சேமித்து வைத்திருந்தனர்.

இந்த செய்தி ஊடகங்களில் பரவியதையடுத்து மாவட்ட ஆட்சியர் இவர்களை நேரில் அழைத்து முதியோர் உதவித் தொகைக்கான ஆணையை வழங்கியுள்ளார்.

மேலும் மருத்துவ செலவிற்கு அரசு தரப்பில் உதவி செய்யப்படும் என்றும் அவர் ஆறுதல் அளித்துள்ளார்.

இந்நிலையில், சென்னையை சேர்ந்த எவர்வின் பாடசாலை அறக்கட்டளையின் தாளாளர் புருஷோத்தமன் பூமலூரில் உள்ள முதியவர்களின் வீட்டில் அவர்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதோடு அவர்கள் வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளின் மதிப்பிற்கேற்றவாறு 46 ஆயிரம் ரூபாயிற்கான காசோலைகளையும் வழங்கியுள்ளார்.

தாங்கள் சிறுகச்சிறுக சேமித்து வைத்திருந்த 46 ஆயிரம் ரூபாயை இனி மாற்ற முடியாது என்ற வேதனை அவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதால் அதனை குறைக்கும் வகையில் இந்த உதவியை செய்ததாக புருஷோத்தமன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!