Yarl கதிர்

இணைய பத்திரிகை

ஜனாதிபதி அணியும் உடை தொடர்பில் சிக்கல்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்த கொள்ளும்போது, அணியும் ஆடை சம்பந்தமாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சாதாரண காற்சட்டை, சேர்ட் அணிவதையே கோட்டாபய ராஜபக்ச வழக்கமாக வைத்துள்ளார்.

அவரின் இந்திய பயணத்தின் போதும், அந்த உடையிலேயே அவர் கலந்து கொண்டிருந்தார்.

நாடாளுமன்றம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 3ம் திகதி மீளவும் கூடும்போது, ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய அணியும் உடை தொடர்பாகவே கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற சம்பிரதாயப்படி, பாரம்பரிய ஆடை, அல்லது மேற்குப்பாணி ஆடை (கோட்) அணியவே அனுமதியுண்டு. இவ்வாறான நிலையில் கோட்டாபய ராஜபக்க்ஷ இந்த இரண்டும் அல்லாத பாணியில் ஆடை அணியும் வழக்கத்தை கொண்டுள்ளதால், அவரது பாணி ஆடையில் சபை அமர்வில் கலந்து கொள்ளலாமா என கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் ஆடையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில், விதிவிலக்கான ஆடைகளிற்கு அனுமதியளிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள்இருப்பதனால், ஜனாதிபதி கோட்டாபயவின் தற்போதைய ஆடைக்கு சபாநாயகர் அனுமதியளிப்பார் என எதிர்பார்க்கபடுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!