Yarl கதிர்

இணைய பத்திரிகை

ஜனாதிபதி கோட்டாபய முன்னிலையில் புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் பதவிப் பிரமாணம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் இடைக்கால அமைச்சரவை இன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 15 அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சத்தியப்பிரமாண நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது.

அதற்கமைய நிதி, பொருளாதார மற்றும் கொள்கை திட்டமிடல், புத்தசாசனா, கலாச்சார விவகாரங்கள், மத விவகாரங்கள், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வீட்டுவசதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதி மறுசீரமைப்பு மற்றும் சட்ட சீர்திருத்த அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு உறவுகள், திறன் அபிவிருத்தி தொழிற்துறை அமைச்சராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்தொழில் மற்றும் நீரியல்வள அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார மற்றும் சுதேச மருத்துவம் மற்றும் மகளிர் சிறுவர் அலுவல்கள் அமைச்சராக பவித்ரா வன்னிஆராச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் தொலைத்தொடர்பு, உயர்கல்வி மற்றும் புத்தாக்கல் அமைச்சராக பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சராக ஜனக பண்டார தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மஹாவலி கமத் தொழில், நீர்பாசனத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சரா சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக டளஸ் அலகபெரும நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!