Yarl கதிர்

இணைய பத்திரிகை

ஜோர்தானில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 8 குழந்தைகள் உட்பட 13 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு

ஜோர்தானில் பாகிஸ்தானிய தொழிலாளர்கள் வசித்துவந்த தகர வீடொன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் பண்ணை தொழிலாளிகள் குடும்பத்தை சேர்ந்த 8 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மூன்று பேர் தீ காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோர்தான் தலைநகரான அம்மான் நகரில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில், ஷூனே பகுதியிலேயே, நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை சுமார் 2 மணியளவில் இந்த பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

இப்பகுதியிலுள்ள ஒரு பண்ணையில் வேலை செய்துவந்த 2 பாகிஸ்தானிய குடும்பத்தை சேர்ந்த எட்டு பேரே, இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் விசாரனை நடத்திவருகின்றனர்.

ஜோர்தானில விவசாயம் சார்ந்த தொழில்களில் 8 ஆயிரத்துக்கும் அதிகமான பாகிஸ்தானியர்கள் வேலை செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!