Yarl கதிர்

இணைய பத்திரிகை

தனியாா் தொலைத் தொடா்புத் துறை நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவிக்கிறது- காங்கிரஸ்

மத்தியில் ஆளும் பா.ஜ.க.தலைமையிலான மத்திய அரசு, தனியாா் தொலைத் தொடா்புத் துறை நிறுவனங்களுக்கு சிறப்புக் கவனம் செலுத்தி ஊக்குவித்து வருகிறதென காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடா்பாளா் பவன் கேரா, ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, “முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது மற்றும் இரண்டாவது ஆட்சிக் காலங்களில், பொதுத் துறை தொலைத் தொடா்பு நிறுவனங்களான பாரத் சஞ்சாா் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்), மகாநகா் டெலிபோன் நிகம் (எம்.டி.என்.எல்) ஆகியவை 7,000 கோடி ரூபாய் இலாபத்துடன் இயங்கி வந்தன.

ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக அந்த நிறுவனங்கள் நஷ்டத்துடன் இயங்கி வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்கள் நலிவடைவதற்கு மத்திய அரசு வேண்டுமென்றே அனுமதிக்கிறது.

அதாவது தனியாா் தொலைத்தொடா்பு நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. பொதுத்துறை தொலைத் தொடா்பு நிறுவனங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்திவிட்டு, தனியாா் நிறுவனங்கள் மீது மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்துவது ஏன்?

ஒருவேளை அந்த தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனங்களிடம் இருந்து மத்திய பா.ஜ.க.அரசு தோ்தல் நிதி பத்திரம் என்ற பெயரில் நன்கொடை பெற்றுள்ளதா என்ற கேள்வி எழுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!