Yarl கதிர்

இணைய பத்திரிகை

தனுஷ் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்.. வெளிவந்தது பிரம்மாண்ட அறிவிப்பு

நடிகர் சிவகார்திகேயனின் அடுத்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. கோலமாவு கோகிலா புகழ் இயக்குனர் நெல்சன் இயக்கும் இந்த படத்திற்கு டாக்டர் என பெயர் வைத்துள்ளனர்.

ஏற்கனவே தனுஷ் ‘டாக்டர்ஸ்’ என்ற படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் அந்த படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது.

அந்த டைட்டிலை தற்போது சிவகார்த்திகேயன் கைப்பற்றியுள்ளார். கேஜேஆர் மற்றும் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.

அனிருத் இசையமைக்கிறார். தற்போது ஒரு தீம் மியூசிக் உடன் டாக்டர் படம் அறிவிப்பு வந்துள்ளது. இதோ..

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!