Yarl கதிர்

இணைய பத்திரிகை

தமிழர்கள் இனவாதிகளாக இருந்திருந்தால் நிச்சயமாக தமிழர்கள் சிவாஜிலிங்கத்திற்கு வாக்களித்திருப்பார்கள்

தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி ராதாகிருஸ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.

தமிழ் மக்களோ முஸ்லிம் மக்களோ இனவாதிகள் அல்ல.

அவர்கள் வாக்களித்ததும் ஒரு பெரும்பான்மையின பௌத்த ஜனாதிபதி வேட்பாளருக்கே.

அவர்கள் இனவாதிகளாக இருந்திருந்தால் நிச்சயமாக தமிழர்கள் சிவாஜிலிங்கத்திற்கும் முஸ்லிம்கள் ஹிஸ்புல்லாவிற்கும் வாக்களித்திருக்க வேண்டும்.

ஆனால் அவர்கள் அளித்த அனைத்து வாக்குகளும் பெரும்பான்மையின பௌத்த வேட்பாளர்களுக்கே.

இதனை பெரும்பான்மையின மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தமிழர்களோ முஸ்லிம்களோ இந்த நாட்டில் இனவாதிகள் அல்ல.

அவர்களும் இந்த நாட்டின் மீது பற்றுள்ளவர்கள்.

தேர்தல் தினத்தன்று தெரணியகலை நூரி தேட்டத்தில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து நேற்றைய தினம் யட்டியாந்தோட்டை கணேபொல மேல்பிரிவில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனை தான் வன்மையாக கண்டிப்பதாக வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இத்தகையை செயற்பாடுகள் புதிய ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துமே தவிர அவர் மீது நல்லெண்ணம் ஏற்படாது.

எனவே தமிழ் முஸ்லிம் மக்களின் மனதை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் தமிழ் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான வேலுசாமி ராதாகிருஸ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!