Yarl கதிர்

இணைய பத்திரிகை

தேர்தல் விதிமுறைகளை மீறிய அரச அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை!

தேர்தல் விதிமுறைகளை மீறிய அரச அதிகாரிகளுக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி ஆணையாளர் நாயகம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், கல்வி அமைச்சர், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர், ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி உள்ளிட்ட நிறுவனங்கள் குறித்த விசாரணையே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான முதற்கட்ட விசாரணைகள் அந்தந்த நியமனங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதற்கட்ட விசாரணை அறிக்கைகளுக்கு அமைய முறையான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பு அரச சேவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!