Yarl கதிர்

இணைய பத்திரிகை

தேவதையை கண்டேன் சீரியல் நடிகர் ஈஸ்வருக்கு பிரபல நடிகையுடன் தொடர்பு.. மனைவி ஜெயஸ்ரீ போலீசில் புகார்

சீரியல் நடிகர்கள் ஈஸ்வர் மற்றும் ஜெயஸ்ரீ இருவரும் காதலித்து சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். தற்போது அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் ஈஸ்வருக்கு வேறொரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் அவர் திருமணம் செய்வதற்காக என்னிடம் விவாகரத்து கேட்டு கொடுமைப்படுத்துகிறார் என்றும் போலீசில் புகார் கூறியுள்ளார். அதனால் ஈஸ்வரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேவதையை கண்டேன் சீரியலில் நடித்துவரும் ஈஸ்வர் அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் மஹாலக்ஷ்மி என்ற நடிகையுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறாராம். வீட்டில் மனைவி, குழந்தை முன்னிலையிலேயே அவருக்கு வீடியோ கால் செய்து கொஞ்சி குலாவுகிறாராம். அவரை திருமணம் செய்யவிரும்பும் அவர் ஜெயஸ்ரீயிடம் விவாகரத்து கேட்டு கொடுமை செய்துள்ளார். அடித்து சித்ரவதை செய்துளளர்.

அவருக்கு குடிப்பழக்கம் இருப்பது மட்டுமின்றி கடன் வாங்கியாவது சூதாட்டத்தில் ஈடுபடுகிறாராம். அதனால் ஏற்பட்ட கடன்களை நான் தான் கட்டி வருகிறேன்.. இதுபோன்ற அடுக்கடுக்கான புகார்களை கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஜெயஸ்ரீ.

மஹாலக்ஷ்மிக்கும் திருமணம் ஆகி ஏற்கனவே குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!