Yarl கதிர்

இணைய பத்திரிகை

நாடு திரும்பினார் ஜனாதிபதிகோட்டாபய ராஜபக்ஷ

இந்தியாவுக்கு தமது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொண்டிருந்த இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்றிரவு நாடு திரும்பினார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 196 ரக விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை நேற்றிரவு அவர் வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

கடந்த 28 ஆம் திகதி, மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

தமது இந்திய விஜயத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த ஆகியோர் உட்பட இந்திய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பல்வேறு மட்ட சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!