Yarl கதிர்

இணைய பத்திரிகை

நிசாந்த சில்வாவை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கவில்லை- சுவிஸ்

சுவிட்சர்லாந்துக்கு தப்பிச் சென்றுள்ள குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரி நிசாந்த சில்வாவை, நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம் தம்மிடம் கோரிக்கை எதனையும் விடுக்கவில்லையென  கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை குற்ற விசாரணைத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரி ஒருவரை சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்துவதற்கு சுவிஸ் அரசாங்கம் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

இவ்விடயம் தற்போது இலங்கை அரசியலிலும் முக்கிய பேசுப்பொருளாக மாறியுள்ள நிலையிலேயே, இலங்கை அரசாங்கத்தினால் அவ்வாறான வேண்டுகோள் எதுவும் விடுக்கப்படவில்லை என  சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!