Yarl கதிர்

இணைய பத்திரிகை

பாகிஸ்தான் மறைமுகப்போரில் ஈடுபட்டுள்ளது – ராஜ்நாத் சிங்

பயங்கரவாதத்தின் மூலம் பாகிஸ்தான் மறைமுகப்போரில் ஈடுபட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், மரபு ரீதியிலான போரில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்துள்ள பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகள் மூலம் மறைமுக போரில் ஈடுபட்டுள்ளது எனக் குற்றஞ்சாட்டினார்.

ஆனால் மறைமுகப்போரில் கூட பாகிஸ்தானால் வெல்ல முடியாது. பாகிஸ்தான் தேர்வு செய்துள்ள மறைமுக போர் என்ற பாதை அதனையே வீழ்த்தப்போகிறது எனவும் அவர்  தெரிவித்தார்.

அத்துடன் சர்வதேச அளவில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டதற்கு பிரதமரின் திறமையான ராஜதந்திரமே காரணம் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!