Yarl கதிர்

இணைய பத்திரிகை

புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக அறிவிப்பு

ஜனாதிபதி செயலகத்தில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு புதிய இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்றத்தை அடுத்து இடைக்கால அமைச்சரவை கடந்த வாரம் நியமிக்கப்பட்டது.

இதனை அடுத்து இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட போதும் சில காரணங்களினால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!