Yarl கதிர்

இணைய பத்திரிகை

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் மகன்களுக்கு சேவாக் கிரிக்கெட் பயிற்சி!

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் இருவரின் மகன்களுக்கு தனது பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு மாணவர்கள் கிரிக்கெட் பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இவர்கள் சேவாக் சர்வதேச பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்வது எனது பாக்கியம் என்றுள்ளார். மேலும், அந்த 2 மாணவர்களும் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் மகன்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!