Yarl கதிர்

இணைய பத்திரிகை

பௌத்த வாக்கு வங்கியை பாதுகாக்க தவறியமையே தோல்விக்கு காரணம்- அகிலவிராஜ்

பௌத்த வாக்கு வங்கியை பாதுகாக்க தவறியமையே ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தமைக்கு காரணமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு- சிறிகொத்தவில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அகிலவிராஜ் காரியவசம் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் தோல்வி குறித்து ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதினால் எந்ததொரு பலனும் கிடைக்கப்போவதில்லை.

அத்துடன் சில தரப்பினர் பௌத்த சமயம் சம்பந்தமான வெளியிட்ட கருத்துக்களே தோல்விக்கான முக்கிய காரணமாகும்.

இதேவேளை தேர்தலில் தமது வேட்பாளரின் வெற்றிக்காக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச தலைவர்களும் என அனைவரும் சிறந்த முறையில் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது. அத்துடன் தோல்வியடைந்த பின்னர் பல்வேறு பொய்யான கதைகளை பேசுகின்றனர்.

மேலும்  சில அரசியல் தலைவர்களின் கருத்துக்களால் பௌத்த வாக்கு வங்கி சிதறி போனது. நாம் அதனை பாதுகாத்திருக்க வேண்டும்.

எனவே ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவது முறையான விடயமல்ல” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!