Yarl கதிர்

இணைய பத்திரிகை

மட்டக்களப்பில் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இடம்பெற்றுவரும் க.பொ.த.சாதாரண தர பரீட்சை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் இன்றையதினம் ஆரம்பமான க.பொ.த.சாதாரண தர பரீட்சைகள் எந்தவித இடையூறுகளுமின்றி நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில்உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் இன்று காலை பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளதுடன் மாணவர்கள் ஆரவத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சென்றுள்ளனர்.

கனமழைக்கு மத்தியிலும் பெற்றோர் தமது பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அழைத்து வந்திருந்ததுடன் பாடசாலைகளுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!