Yarl கதிர்

இணைய பத்திரிகை

மண்சரிவில் சிக்குண்டவர்களில் மூவரின் சடலங்கள் கண்டெடுப்பு- மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்

நுவரெலியா- மலபத்தாவ பகுதியில் மண்சரிவில் சிக்குண்ட நான்கு பேரில் மூன்று பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போயுள்ள மற்றுமொருவரை தேடும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்து  ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நுவரெலியா- பதியபெலெல்ல, மலபத்தாவ பிரதேசத்தில் வீடொன்றின் மீது நேற்று (சனிக்கிழமை) இரவு மண்மேடு சரிந்து விழுந்தமையினாலே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது சம்பவ இடத்திற்கு நுவரெலியாவில் இருந்து மேஜர் அசித்தரன திலக்க தலைமையில் இராணுவப்படை வரவழைக்கபட்டு, தேடும் நடவடிக்கையினை மேற்கொண்ட போது கணவன், மனைவி மற்றும் அவர்களின் பேர பிள்ளை ஆகியோரின் சடலங்கள் மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நாளைய தினம், இடம்பெறவிருக்கின்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவரை தேடு பணியில் தொடர்ந்தும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!