Yarl கதிர்

இணைய பத்திரிகை

மாநிலங்களுக்கு வரி பங்கை வழங்க முடியாத நிலைமையில் உள்ளது மத்திய அரசு- காங்கிரஸ்

மத்திய அரசிடம் நிதி இல்லாததால்தான் மாநில அரசுகளுக்கு சரக்கு, சேவை வரிக்கான பங்கை தரவில்லையென காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

சண்டிகாரில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரன்தீப் சிங் சுர்ஜிவாலா மேலும் கூறியுள்ளதாவது, நாட்டில் பொருளாதாரத்தில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் மாநில அரசுகளுக்கு சேர வேண்டிய சரக்கு, சேவை வரி பங்கை மத்திய அரசு ஏன் வழங்கவில்லை? நாட்டின் நிதி பற்றாக்குறை  7.2 இலட்சம் ரூபாய் கோடியாக இருக்குமென வரவு- செலவு மதிப்பீட்டில் கூறியுள்ள நிலையில், ஒக்டோபர் இறுதியில் நிதி பற்றாக்குறை 102.4 சதவீதம் என்ற நிலையை அடைந்துள்ளது.

அத்துடன் மத்திய அரசிடம் நிதி இல்லாததால்தான் மாநில அரசுகளுக்கு சரக்கு, சேவை வரிக்கான பங்கை  கூட வழங்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!