Yarl கதிர்

இணைய பத்திரிகை

மிடில் ஸ்டெம்பை உடைத்த இந்திய வீரர்… நான் ரெடி என்பது போல் பதிவிட்ட புகைப்படம்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா பயிற்சியின் போது ஸ்டம்ப்பை உடைத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளது, வைரலாகி வருகிறது.

வங்கதேச அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்திய அணி, மேற்கிந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த இரு தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் யார்க்கர் மன்னன், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா இடம் பெறவில்லை.

காயம் காரணமாக வங்கதேச அணிக்கெதிரான தொடரில் பும்ரா இடம் பெறாத பும்ரா, தற்போது முழு உடல் தகுதி பெற்ற பின்பும், அணியில் இடம் பிடிக்கவில்லை, இதற்கு முக்கிய காரணம் அடுத்து நியூசிலாந்து அணிக்கெதிராக மிகப் பெரிய தொடர் உள்ளதால், அதற்காக பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பும்ரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இன்றைய பயிற்சி நேரமும், ஸ்டம்பும் முடிவுக்கு வந்துள்ளது என்று உடைந்த ஸ்டம்பை பதிவிட்டு பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!