Yarl கதிர்

இணைய பத்திரிகை

முதன்முறையாக செவ்வாய் கிரக ஆய்வில் இறங்கியது சீனா!

செவ்வாய்க் கிரக ஆய்வுக்கான சீனாவின் பரிசோதனை முயற்சி முதன்முறையாக நடைபெற்றது.

ஹேபெய் மாநிலத்திலுள்ள ஒரு தளத்தில் தரையிறங்கி விண்வெளியில் நிறுத்துவது, தடைகளில் இருந்து தப்பிப்பது உள்ளிட்டவை குறித்து இன்று (வியாழக்கிழமை) பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

இத்தளம், புவிக்கு அப்பாலுள்ள வான் பொருட்களில் தரையிறங்கும் சோதனைக்கான ஆசியாவின் மிகப் பெரிய பரிசோதனைத் தளமாக உள்ளது.

செவ்வாய்க் கிரக ஆய்வுக்கான சீனாவின் முதலாவது திட்டம் 2020ஆம் ஆண்டு செயற்படுத்தப்படவுள்ளது. செவ்வாய்க் கிரகத்தைச் சுற்றிப் பார்ப்பது, செவ்வாய்க் கிரகத்தில் தரையிறங்குவது, செவ்வாய்க் கிரகத்தின் மீது உலக பன்நோக்கப் பரிசோதனையை நடத்துவது என்பன இத்திட்டத்தின் நோக்கங்களாக காணப்படுகின்றன.

பிரான்ஸ், இத்தாலி, பிரேசில் உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த சீனாவுக்கான தூதர்கள், சீனாவுக்கான ஐரோப்பிய மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தூதுக் குழுவினர்கள், ஆசியா – பசிபிக் விண்வெளி ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகள், சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் உள்ளிட்ட 70 பேர் இப்பரிசோதனையைப் பார்த்தனர்.

சர்வதேச விண்வெளிப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை சீனா பயன்தரும் முறையில் மேற்கொள்ளும் ஒரு முக்கிய நடவடிக்கை இது பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!