Yarl கதிர்

இணைய பத்திரிகை

முதன் முறையாக இரவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது அக்னி-3 ஏவுகணை

ஒன்றரை டன் அளவு அணு‌ ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணை முதன் மு‌றையாக இரவில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஒடிசா மாநில கடற்பகுதியிலுள்ள அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை நேற்று (சனிக்கிழமை) இரவு மேற்கொள்ளப்பட்டது.

அக்னி-3 ஏவுகணை, 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன்கொண்டதாகும். சுமார் 17 மீட்டர் அகலமும்‌ 50 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணை ஏற்கனவே இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் அக்னி-3 ஏவுகணையின் செயற்திறனைக் கண்டறிய, ஏற்கனவே மூன்று முறை சோதனை செய்யப்பட்டதாகவும் தற்போது முதன் முறையாக இரவில் சோதித்ததாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!