Yarl கதிர்

இணைய பத்திரிகை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபரின் பிணை கோரிக்கை நாளை விசாரணை!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் பிணை கோரி  விண்ணப்பம் செய்துள்ளனர்.

அவர்களினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை விண்ணப்பக் கோரிக்கை நாளை (புதன்கிழமை) பரிசீலிக்கப்படும் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

உளவுத்துறை எச்சரிக்கைகளைப் பெற்ற போதிலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறிய குற்றத்திற்காக இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

இதனை அடுத்து கடந்த ஒக்டோபர் 9 ஆம் திகதி, நீதவான் நீதிமன்ற தீர்ப்பை இரத்து செய்து அவர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!