Yarl கதிர்

இணைய பத்திரிகை

யாழில் தீயிலிட்டு எரிக்கப்பட்ட ஆயிரம் கிலோ கிராம் கஞ்சா

சுமார் 10 கோடி ரூபா பெறுமதியான ஆயிரம் கிலோ கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கரின் உத்தரவில் அவரது முன்னிலையில் எரித்து அளிக்கப்படாது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்கு அண்மையாகவுள்ள வெற்றுக் காணியில் இந்த சான்றுப்பொரு எரித்து அழிக்கும் பணி இன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த ஒரு வருடத்துக்குள் இடம்பெற்று முடிந்த கஞ்சா போதைப்பொருள் குற்றத்துக்கான 20 வழக்குகளின் சான்றுப்பொருள்களை எரித்து அழிக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது.

அதனடிப்படையில் அவற்றை எரித்து அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேல் நீதிமன்ற பதிவாளர் மீரா வடிவேற்கரசன் முன்னெடுத்தார்.

இதேவேளை, கடந்த மூன்று வருடங்களில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் 2 ஆயிரத்து 500 கிலோக் கிராமுக்கு அதிகமான கஞ்சா போதைப்பொருள் எரித்து அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!