Yarl கதிர்

இணைய பத்திரிகை

ரசிகர்களைக் கவரும் ‘தனுசு ராசி நேயர்களே’ படத்தின் பாடல்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் ‘தனுசு ராசி நேயர்களே’ பாடல் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.

இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் விஜய்யிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.

இந்நிலையில், இப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் பாடிய ‘I want a Girl’ என்ற பாடலின் காணொளி தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை பாடலசிரியர் கு.கார்த்திக் எழுதியுள்ளார்.

ஸ்ரீ கோகுலம் மூவீஸ் பேனரின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்று கிடைத்துள்ள நிலையில், இப்படம் டிசம்பர் 6 ஆம் திகதி  வெளியாகவுள்ளது.

ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஸ்ரீகோகுலம் மூவீஸ் சார்பில் கோகுலம் கோபாலன் தயாரிக்கும் இந்த படம் ரொமாண்டிக் நகைச்சுவை கதையாக உருவாகிறது. இதில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!