Yarl கதிர்

இணைய பத்திரிகை

ரிஷாட்டின் வாகனம் மீது தாக்குதல்

முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவருமான ரிஷாட் பதியுதீன் பயணம் செய்த வாகனம் மீது  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் புத்தளத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சரின் வாகன அணியை புத்தளம் முந்தல் கடைமோட்டை பகுதியில் வழிமறித்த 10 பேர் கொண்ட கும்பல், கற்களாலும் கூரிய ஆயுதங்களாலும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதில் ரிஷாட் பதியுதீனின் வாகனம் உள்ளிட்ட பல வாகனங்கள் சேதமடைந்தன. மேலும்  சிலர் காயமடைந்தனர்.

எனினும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் காயங்களின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!