Yarl கதிர்

இணைய பத்திரிகை

வடக்கின் புதிய ஆளுனராக முன்னாள் நீதியரசர் நியமனம்?

புதிய காபந்து அரசாங்கத்தில் 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

இதில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வடக்கு தவிர்ந்த ஏனைய இரண்டு மாகாணங்களிற்குமான ஆளுனர்கள் தெரிவாகி விட்ட நிலையில் வடக்கு ஆளுனர் விவகாரம் மட்டும் இழுபறியில் நீடிக்கிறது. முத்தையா முரளிதரன், ரிஷி செந்தில்ராஜ் உள்ளிட்ட சிலரை ஆளுனராக பதவியேற்க ஜனாதிபதி கோட்டா அழைத்தபோதும், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர்.

இந் நிலையில் வட மாகாண ஆளுநராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பில் சிறீபவனுடன் பேச்சு நடத்தப்பட்டதாகவும், அவர் கொள்கையளவில் இணங்கி உள்ளதாகவும் தெரிகிறது.

இதேவேளை, வடமாகாண ஆளுநர் நியமனம் தொடர்பில் பல்கலைகழகமொன்றின் விரிவுரையாளருடனும் பேச்சு நடத்தப்பட்டுள்ள நிலையில் அவரும் சம்மதம் தெரிவித்திருந்தாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

இதேவேளை, யாழ்ப்பாணப் பத்திரிகையாளர் ஒருவரும் ஆளுனர் பதவியை பெற தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

எனினும், கோட்டாபய தரப்பு அவரை விரும்பவில்லை எனவும், முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனே வடமாகாண ஆளுநராக வருவதற்கு அதிகம் வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!