Yarl கதிர்

இணைய பத்திரிகை

வடக்கு ஆளுநராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசரை நியமிக்க முயற்சி

வடக்கு மாகாண ஆளுநராக உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனை நியமிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏனைய 6 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால்  வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான ஆளுநர்களை நியமிப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவன் உள்ளிட்ட மூவரின் பெயர்கள் வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கான பரிசீலனையில் காணப்படுவதாக கூறப்படுகின்றது.

இதில்  முன்னாள் தலைமை நீதியரசர் கே.சிறீபவனே முதன்மை இடத்தில் உள்ளதாக அரசாங்க  தகவல்கள்  தெரிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!