Yarl கதிர்

இணைய பத்திரிகை

வவுனியாவில் உருளைபந்து விளையாட்டு அறிமுக நிகழ்வு

வவுனியாவில் உருளைபந்து விளையாட்டு அறிமுக நிகழ்வு  வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று இடம்பெற்றது.

இலங்கை உருளை பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அதன் செயலாளரும், பயிற்றுவிப்பாளருமான நரேந்திரன் தலைமயில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

முன்னதாக வவுனியாமாவட்ட செயலகம், சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலகம், மற்றும் உருளைபந்து சம்மேளனம் ஆகியவை இணைந்து டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றை வவுனியா நகரில் முன்னெடுத்திருந்தனர். குறித்த ஊர்வலம் வவுனியா மாவட்டசெயலகத்தில் ஆரம்பித்து நகர் வழியாக நகரசபை வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதிக்கு சென்றிருந்தது. ஏனைய நிகழ்வுகள் அங்கு இடம்பெற்றிருந்தது.
நிகழ்வில் முதன்மை அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர்காதர் மஸ்தான் கலந்துகொண்டதுடன்,சிறப்பு  விருந்தினர்களாக நகரசபை தலைவர் இ.கௌதமன்,பிராந்திய நோயியலாளர்வைத்தியர் லவன்,சிங்கள பிரதேசசெயலாளர் ஜானக, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பர்சூக் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

நிகழ்வில் உருளை பந்து விளையாட்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் ,அதன் பயன்கள் தொடர்பாகவும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு  தெளிவூட்டப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!