Yarl கதிர்

இணைய பத்திரிகை

வவுனியாவில் சோளப்பயிர்ச் செய்கையில் படைப்புழு தாக்கம்

வவுனியாவில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பாதிக்கும் வகையில் சோளப்பயிர்ச்செய்கையில் படைப்புழு தாக்கம் அதிகரித்துள்ளதாக வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் சகிலாபானு தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் 500 ஏக்கரில் சோளப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் 100 ஏக்கரில் படைப்புழு முற்றாக தாக்கியுள்ளதாக தெரிவித்த அவர் சோளப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு நேரடியாக சென்று பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விளக்கமளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந் நிலையில் படைப்புழு தாக்கிய சோளப் பயிர்ச்செய்கைப் பகுதிக்கு விவசாய திணைக்கள அதிகாரிகள் குழு நேரடியாக சென்று படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் கருத்து தெரிவிக்கையில், ஆரம்பகாலத்தில் படைப்புழுவின் தாக்கம் குறைவாக காணப்பட்டபோதிலும் தற்போத 50 வீதம் வரையில் தோட்டங்களில் தாக்கியுள்ளது. எனவே இது தொடர்பாக அறிவுரைகளை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றோம்.

இவ்வாறான தாக்கமுள்ள விவசாயிகள் உடனடியாக சோளப்பயிரின் குருத்துப்பகுதியில் சாம்பல் அல்லது மணலை பிரயோகித்துக்கொள்ளுங்கள். அத்துடன் உங்கள் பகுதி விவசாய போதனாசிரியரையோ அல்லது எமது தலைமை காரியாலயத்துடன் தொடர்புகொள்ளுமாறு கோருகின்றோம்.

இதற்குமப்பால் எமது தலைமைகாரியாலயத்தின் 024 2222324 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!