Yarl கதிர்

இணைய பத்திரிகை

விஜயுடன் கைகோர்க்கும் கைதி வில்லன்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 64’ திரைப்படத்தில், அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘தளபதி 64’ என்று அழைத்து வருகிறார்கள்.

இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதுடன், விஜய் சேதுபதி,  சாந்தனு, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

மேலும் இந்த திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்.டி.வி. நிறுவனம் நேற்று கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!