Yarl கதிர்

இணைய பத்திரிகை

விஜய் அப்படி யோசிக்க, லோகேஷ் இப்படி யோசிகின்றார், தளபதி 64 குறித்து பிரபலம் ஓபன் டாக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் படம் தளபதி 64(இன்னும் பெயரிடப்படவில்லை). இப்படத்தை விஜயின் உறவினர் சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

டெல்லியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு கர்நாடகாவில் துவங்கவுள்ளது.

மேலும், ஆடை பட இயக்குனர் ரத்னகுமார் இப்படத்திற்கு எழுத்தாளராக கமிட்டாகி இருப்பது அனைவருக்கு தெரியும்.

இந்நிலையில் ரத்னகுமார் அவர்களை பேட்டியில் தொகுப்பாளர் தளபதி 64 படத்தை பற்றி கேட்டுள்ளார். அப்போது படத்தை பற்றியும் விஜய் மற்றும் லோகேஷ் பற்றியும் சில விஷயங்களை ரத்னகுமார் பேசியுள்ளார்.

இதில் ‘இப்படம் விஜய் படமாக இருக்க வேண்டும் என்று லோகேஷ் மெனக்கெட, அதே மாதிரி லோகேஷ் படமாக இருக்க வேண்டும் என தளபதியும் உழைத்து வருகின்றார்’ என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!