Yarl கதிர்

இணைய பத்திரிகை

விமானத்தில் நல்ல இருக்கை வேண்டும் என்பதற்காக பெண் செய்த மோசமான செயல்!

ப்ளோரிடாவைச் சேர்ந்த ஒரு பெண், நல்ல இருக்கை கிடைக்கவில்லை என்பதற்காக தனக்கு உடல் நலமில்லை என்று ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்டார்.

Pensacolaவிலிருந்த மியாமிக்கு புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் பயணித்த ஒரு பெண், திடீரென தனக்கு மூச்சு விடமுடியவில்லை என்று கூறவே, விமானி புறப்பட்ட இடத்துக்கே விமானத்தை திருப்பவேண்டியதாயிற்று.

ஆனால், விமானம் தரையிறங்கியதும், தனக்கு நல்ல இருக்கை கொடுக்கவில்லை என்பதற்காக தான் போலியாக உடல் நலமில்லாததுபோல் நடித்ததாக, உண்மையை ஒப்புக்கொண்டார் அந்த பெண்.

உடனடியாக விமான ஊழியர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர். முதலில் அந்த பெண் விமானத்தில் இருந்து இறங்க மறுக்கவே, மற்ற பயணிகள் அனைவரையும் இறக்க வேண்டிய சூழல் உருவாயிற்று.

பின்னர் அந்த பெண்ணை பொலிசார் கைது செய்து அழைத்துச் சென்றபின், மற்ற பயணிகள் மீண்டும் விமானம் ஏற, தாமதமாக புறப்பட்டது விமானம்.

இப்போதைக்கு அவர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!