Yarl கதிர்

இணைய பத்திரிகை

வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை அதிகரிக்க தீர்மானம்!

தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை அதிகரிப்பது குறித்து திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டப்பிரிவு பணிப்பாளர் நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் அதிக வேட்பாளர்கள் போட்டியிட முன்வருகின்றமையைக் குறைக்கும் நோக்கில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் கட்சி சார்பில் பிரேரிக்கப்படும் பட்சத்தில் 25 இலட்சம் ரூபாய் கட்டுப்பணமும் சுயேட்சை வேட்பாளராயின் 30 இலட்சம் ரூபாய் கட்டுப்பணமும் செலுத்தும் வகையில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

10 வருடங்களுக்கு மேல் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாயின் முன்வைக்கப்பட்டுள்ள கட்டுப்பணத்தில் நான்கில் ஒரு பங்கை செலுத்துவது போதுமானதாக அமையும் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய திட்டத்திற்கு அமைய பொதுத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர் 5,000 ரூபாய் கட்டுப்பணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் பிரேரிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் 7,500 ரூபாய் கட்டுப்பணம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!