Yarl கதிர்

இணைய பத்திரிகை

17 பேர் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு போராடியவர்களை பொலிஸார் தாக்கியமைக்கு ஸ்டாலின் கண்டனம்

மேட்டுபாளையத்தில் 17 பேர் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு போராடியவர்களை பொலிஸார் தாக்கியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம்- மேட்டுப்பாளையத்திலுள்ள நடூர் என்ற இடத்தில் இருக்கும் 4 வீடுகள் நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இடிந்து விழுந்தது.

இதன்போது வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களில் 17 பேர் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர்.

பொதுமக்களின் உதவியோடு 7 பெண்கள், 2 சிறுவர்கள் உட்பட 17 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக  மேட்டுப்பாளையம் அரச மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில்உயிரிழந்தோருக்கான நிவாரணத்தை 25 இலட்சமாக உயர்த்தித்தரவும், விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவரை கட்டியவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸார்  மற்றும் போராட்டக்காரர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன்போது  கலைந்து செல்லுமாறு பொலிஸார் கூறினர்.

ஆனால் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்ததால் பொலிஸார் அவர்களை கடுமையாக தாக்கி, கைது செய்துள்ளனர்.

இந்நிலையிலேளே நியாயம் கேட்டு போராடியவர்களை பொலிஸ் தாக்கியதற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

17 பேரின் உயிரிழப்பு கூட ஆட்சியாளர்களின் கல்மனதைக் கரைக்கவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.

பாதிக்கப்பட்டோரை பார்த்து பரிகசிக்கும் இரக்கமற்ற அரசு அ.தி.மு.க அரசு என்று கண்டித்துள்ளார்.

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் உயிரிழந்த நிகழ்வை விபத்து என்று கூறி கடந்து விட முடியா என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம் சுமத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!