Yarl கதிர்

இணைய பத்திரிகை

50 ஆயிரம் பேருக்கு உதவி ஆசிரியர்கள் நியமனம்

க.பொ.த உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான வாய்ப்பை இழந்த 50 ஆயிரம் மாணவர்களை உதவி ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கான அமைச்சரவை அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும், இவ்வாறு இணைத்துக்கொள்ளப்படவுள்ள உதவி ஆசிரியர்களுக்கு அருகிலுள்ள கல்வி நிறுவனத்தில் இணைந்து பட்டம் பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்குமெனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேற்படி உதவி ஆசிரியர்கள் தரம் 1 தொடக்கம் 5 வரையிலான வகுப்புக்களின் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அதேபோல, 4 வருட காலப்பகுதிக்குள் இவர்களுக்கு கொடுப்பனவு மற்றும் வட்டி இல்லாத கடன்களை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.

மேற்படி உதவி ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்வதன் ஊடாக தற்போது பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்க்க முடியுமெனவும் கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!