Yarl கதிர்

இணைய பத்திரிகை

அருணோதயா சுப்பர்லீக் கால்பந்தாட்டத் தொடரின் முடிவுகள்

ஆழியவளை அருணோதயா விளையாட்டுக் கழகத்தினால்நடாத்தப்படும் 2021 ஆம் ஆண்டிற்கான  வடமராட்சி கிழக்கு கழகங்களுக்கு இடையிலான அருணோதயா சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடரின் ஆட்டங்கள் ஆழியவளை அருணோதயா விளை யாட்டுக் கழக மைதா னத்தில் இடம் பெற்று வருகின்றது. இதில் முதலாவதுஆட்டத்தில்
அலையோசை எப் சி அணிக்கும், ஆலியாவலாய் ஏப்சி அணிக்கும், இடையிலானஆட்டத்தில் அலையோசைய் எப் சி அணி  2:0 என்ற கோல் கணக்கில் வெற்றி  பெற்றது.அலையோசைய் எப் சி அணி சார்பில் தயன், திபாகர் ஆகியோர் தலா ஒரு கோவினை பதிவு செய்தனர். ஆட்ட நாயகனாக அலையோசை எப் சி அணி  பின்கள வீரர் தயன் தெரிவானார்.
 இரண்டாவதுஆட்டத்தில் 
அலியூர் கிங்ஸ் எப் சி அணிக்கும், சூரியோதயம் .எப் சி அணிக்கும் இடையிலான இரண்டு அணிகளும் ஆட்ட நேர முடிவில்  ஏத வித கோல்களையும் பதிவு செய்ய தினாால ஆட்டம்  சமநிலையில் முடிவுற்றது. ஆட்டநாயகனாக சூரியோதயம் அணியின்  பின்கள வீரர் அருண் தெரிவு செய்யப்பட்டார். மூன்றாவது ஆட்டத்தில் நோத்தயா ஏப்சி அணிக்கும், கடல்பறவைகள்அணிக்கும்.,இடையிலானஆட்டத்தில்  இரண்டு அணிகளும் ஆட்ட நேர முடிவில்  தலா 2 கோல்களை பதிவு செய்ததினாால ஆட்டம்  சமநிலையில் முடிவுற்றது.நோத்தயா ஏப்சி அணி சார்பில்  சிந்துஜன் இரண்டு கோல்களையும்,கடல் பறவைகள்அணி சார்பில்.  பார்த்தீபன் இரண்டு கோல்களையும் பதிவு செய்தனர்.
ஆட்ட நாயகனாக கடல் பறவைகள் அணி  வீரர் பார்த்தீபன்  தெரிவு செய்யப்பட்டார்.
 நான்காவது  ஆட்டத்தில்  அலையோசைய்எப் சி அணிக்கும்,சூரியோதயம்  எப் சி அணிக்கும் இடையிலானஆட்டத்தில் இரண்டு அணிகளும் ஆட்ட நேர முடிவில்  ஏத வித கோல்களையும் பதிவு செய்யதினாால ஆட்டம்  சமநிலையில் முடிவுற்றது.சூரியோதயம் ஏவ்.சி அணி வீரர் துசி தெரிவு செய்யப்பட்டார்.
ஐந்தாவது  ஆட்டத்தில் அழியாவலாய்  எப் சிஅணிக்கும்,கடல் பறவைகள் அணிக்கும், இடையிலான ஆட்டத்தில் கடல்பறவைகள்  அணி   2:1 என்ற கோல் கணக்கில்  வெற்றி  பெற்றது. கடல்பறவைகள்  அணி அணி  சார்பில்  அணித்தலைவர் சுதர்சன் ஒரு கோலையும்,பார்த்தீபன் ஒருகோலினையும், ஆழியாவலாய்ஏவ்.சிஅணி  சார்பில் ராஜ் ஒரு  கோலினை பதிவு செய்தனர்.ஆட்டநாயகனாக ஆழியாவலாய் ஏவ்.சிஅணி வீரர் ராஜ்  தெரிவு செய்யப்பட்டார்.
ஆறாவது ஆட்டத்த்தில் 
நோத்தயா எப் சி அணிக்கும், அலியூர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் நோத்தயா எப் சி அணி 2:1 என்ற கோல் கணக்கில்  அணி வெற்றி பெற்றது. .நோத்தயா எப் சி அணி அணி  சார்பில் அணித்தலைவர் சரண்  ஒரு கோலையும், அகி ஒரு கோலினையும், அலியூர் கிங்ஸ் அணி  சார்பில் யூட் ஒரு  கோலினை பதிவு செய்தனர்.ஆட்ட நாயகனாகநோத்தயா எப் சி   வீரர் அகி தெரிவு செய்யப்பட்டார்.
ஏழாவது ஆட்டத்தில்  அலையோசாய்எப் சிஅணிக்கும்,  கடல் பறவைகள் அணிக்கும், இடையிலான ஆட்டத்தில் ஆட்ட நேர முடிவில் இரண்டு அணியினரும் தலா ஒரு கோலினை பதிவு செய்த தினால் சமநிலையில் முடிவுற்றது.கடல் பறவைகள்அணி சார்பில் பார்த்தீபன் ஒரு கோலினையும், அலையோசைய் ஏவ்.சி அணி சார்பில் திபாகர் ஒரு கோலினையும் பதிவு செய்தனர்.
ஆட்ட நாயகனாக கடல் பறவைகள்அணி வீரர் 
பார்த்தீபன் தெரிவு செய்யப்பட்டார்.

 எட்டாவது  ஆட்டத்தில்  
நோத்தயா ஏவ் சி அணிக்கும், சூரியோதயம்   அணிக்கும் இடையிலான ஆட்டத்தில் இரண்டு அணியினரும் ஆட்ட நேர முடிவில் தலா 2 கோலினை பதிவு செய்ய ஆட்டம் சமநிலையில் முடிவுற்றது.நோத்தயா ஏவ் சி . அணி சார்பில்  சிந்துஜன்  இரண்டுகோல்களையும், சூரியோதயம் ஏவ் சி  அணி சார்பில்  துஜீவ் இரண்டு  கோல்களையும் பதிவு செய்தனர்.ஆட்டநாயகனாக சூரியோதயம் ஏவ் சி அணி வீரர் துஜீவ்  தெரிவு செய்யப்பட்டார்.
 ஒன்பதாவது  ஆட்டத்தில்  அலியாவலாய்  ஏவ் சி அணிக்கும், அலியூர் கிங்ஸ் அணிக்கும், இடையிலான ஆட்டத்தில் அலியாவலாய்ஏவ் சி   அணி 2:1 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்றது.ஆட்டநாயகனாகஅலியாவலாய்  ஏவ் சி  அணி வீரர் ராஜ் தெரிவு செய்யப்பட்டார்.
 பத்தாவது  ஆட்டத்தில் 
நோத்தயா  ஏவ் சி அணிக்கும்,அலையோசைய்  ஏவ் சி அணிக்கும் , இடையிலான ஆட்டத்தில் நோத்தயா  ஏவ் சி அணி 2:1 என்ற கோல் கணக்கில் பெற்றி பெற்றது.நோத்தயா ஏவ் சி  அணி சார்பில் சிந்துஜன்  இரண்டுகோல்களையும், அலையோசைய்  ஏவ் சி அணிசார்பில் திபாகர் ஒரு கோலினையும் பதிவு செய்தனர்.ஆட்ட நாயகனாக நோத்தயா ஏவ் சி  அணி வீரர் சிந்துஜன் தெரிவு செய்யப்பட்டார்.பதினோராவது  ஆட்டத்தில் போட்டியான அலியூர் கிங்ஸ் அணிக்கும்,  கடல் பறவைகள் அணிக்கும், இடையிலான ஆட்டத்தில் அலியூர் கிங்ஸ் அணி  2:0 என்ற கோல் கணக்கில்  அணி வெற்றி பெற்றது..
அலியூர் கிங்ஸ்அணி சார்பில்  சரண் ஒரு  கோலினையும், ஜெசி ஒரு கோலினையும் பதிவு செய்தனர்.ஆட்ட நாயகனாகஅலியூர் கிங்ஸ்அணி  வீரர் சரண் தெரிவு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!