Yarl கதிர்

இணைய பத்திரிகை

பாசையூர் பிரிமியர் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரில் பாசையூர் றோயல் அணி வெற்றி பெற்றது.

பாசையூர் சவுக்கடி நண்பர்கள் நடாத்தும் பாசையூர் பிரிமியர் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரின் ஆட்டம் ஒன்றில் பாசையூர்  றோயல் அணி 13 ஒட்டங்களால் வெற்றி பெற்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பாசையூர் புனித அந்தோனி |யார்விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது ஆட்டத்தில் பாசையூர்  றோயல் அணியை எதிர்த்து பாசையூர் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதிக் கொண்டன.
இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாசையூர் பஞ்சாப் கிங்ஸ் அணியினர் தடுப்பை களத்தடுப்பை தீர்மானித்தனர்.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாசையூர் றோயல் அணியினர் 6 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில்
6 இலக்கினை இழந்து  80 ஓட்டங்களைப் பெற்றது.இதில் தனுசன்  28 ஓட்டங்களையும்,  வதனன் 25 ஓட்டங்களையும், அணி சார்பாக பெற்றனர்.
பந்துவீச்சில் பாசையூர் கிங்ஸ் அணி சார்பாக  கஸ்ரோ, றஜீவ் ஆகியோர்  தலா இரண்டு இலக்கினை . வீழ்த்தினர்.
81 ஓட்டங்களை பெற்றால் வெற்றி யென  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாசையூர் பஞ்சாப் கிங்ஸ் அணியினர் 6 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 3 இலக்கினை  இழந்து  67 ஓட்டங்களை மட்டும் பெற்றன.
இதில் நியூட்டி 33 ஓட்டங்களையும், றஜீவ்  10  ஓட்டங்களையும், தமது அணி சார்பாக பெற்றனர்.
பந்துவீச்சில் பாசையூர் றோயல் அணி சார்பில் டிஸ்மன் 2 இலக்கினை . வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!