Yarl கதிர்

இணைய பத்திரிகை

பாசையூர் பிரிமியர் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரில் பாசையூர் கப்பிட்டல் அணி 6 இலக்கினால் வெற்றி பெற்றது

பாசையூர் சவுக்கடி நண்பர்கள் நடாத்தும் பாசையூர் பிரிமியர் லீக் மென்பந்து துடுப்பாட்ட தொடரின் ஆட்டம் ஒன்றில் பாசையூர்  கேப்பிட்டல் அணி 6 இலக்கினால் 
வெற்றி பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாசையூர் புனித அந்தோனி யார்விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்ற இரண்டவது ஆட்டத்தில் பாசையூர்  கப்பிட்டல் அணியை எதிர்த்து பாசையூர் றோயல் சாலஞ்சர்   அணி மோதிக் கொண்டன.
இதில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாசையூர் கப்பிட்டல் அணியினர் தடுப்பை களத்தடுப்பை தீர்மானித்தனர்.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய  பாசையூர் றோயல் சாலஞ்சர்  அணியினர் 6 பந்துப் பரிமாற்றங்கள் நிறைவில்2 இலக்கினை இழந்து  80 ஓட்டங்களைப் பெற்றது.இதில் அஸ்மி ஆட்டம் இழக்காமல்  35 ஓட்டங்களையும்,  விஜித் ஆட்டம் இழக்காமல்  18 ஓட்டங்களையும்,அற்ரியன்17ஓட்டங்களையும்,அணி சார்பாக பெற்றனர்.
பந்துவீச்சில் பாசையூர் கப்பிட்டல் அணி சார்பாக  மதுஷன், அஜீத் ஆகியோர்  தலா ஓர் இலக்கினை . வீழ்த்தினர்.81 ஓட்டங்களை பெற்றால் வெற்றியென  பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாசையூர் கப்பிட்டல்  அணியினர் 4.2 பந்து பரிமாற்றங்கள் நிறைவில் 2 இலக்கினை  இழந்து  81 ஓட்டங்களைப் பெற்றன.
இதில் வினிஸ்ரன் ஆட்டம் இழக்காமல் 38 ஓட்டங் களையும், சயன்  10  ஓட்டங்களையும், தமது அணி சார்பாக பெற்றனர்.
பந்துவீச்சில் பாசையூர் றோயல் சாலஞ்சர்
அணி சார்பில் றெமிடன், அஸ்மி  தலா ஒர் இலக்கினை . வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!