Yarl கதிர்

இணைய பத்திரிகை

Update -வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை மேட்டுப்பாளையம் அருகில் வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதற்கமைய இந்த அனர்த்தத்தில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அணைகள், ஏரிகள், குளங்கள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றின் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேட்டுப்பாளையம் அருகே நடூர் – ஏடிக்காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம் அருகே நடூர் – ஏடிக்காலனி பகுதியில் அதிக மழை காரணமாக தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்துள்ளது. இதில் 4 வீடுகளில் இருந்த 12 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.

இதனையடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டனர்.

அதற்கமைய இதுவரையில் 9 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 4 வீடுகளில் இருந்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!